பட்ஜெட் கூட்ட தொடர் நாட்களை முடிவு செய்ய குழு அமைப்பு
பட்ஜெட் கூட்ட தொடர் நாட்களை முடிவு செய்ய குழு அமைப்பு
ADDED : ஆக 20, 2026 08:24 PM
புதுச்சேரி: எத்தனை நாட்களுக்கு சட்டசபை கூட்டத் தொடரை நடத்துவது குறித்து முடிவு செய்ய அலுவல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழுவின் தலைவராக தற்காலிக சபாநாயகர் அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக முதல்வர் ரங்கசாமி, துணை சபாநாயகர், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எதிர்க்கட்சி தலைவர் நாஜிம், எம்.எல்.ஏ.,க்கள் நேரு, ராமு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவரது பெயர் பட்டியலில் சேர்க்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் பட்ஜெட் 24ம் தேதி தாக்கல் செய்யப்பட்டதும், இந்த அலுவல் குழு கூடி சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பதை முடிவு செய்யும்.
வரும் 31ம் தேதி வரை, இடைக்கால பட்ஜெட்டிற்கு கால அவகாசம் உள்ளதால் 5 அல்லது 6 நாட்கள் வரை சட்டசபை கூட்டத் தொடர் நடத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகின்றது.
