/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அடிப்படை வசதியின்றி பொது மக்கள் அவதி; நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
/
அடிப்படை வசதியின்றி பொது மக்கள் அவதி; நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
அடிப்படை வசதியின்றி பொது மக்கள் அவதி; நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
அடிப்படை வசதியின்றி பொது மக்கள் அவதி; நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
ADDED : ஜன 03, 2024 12:17 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக நேரு எம்.எல்.ஏ., குற்றம் சாட்டி உள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
உருளையன்பேட்டை சட்டசபை தொகுதியில்,50 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில் அதில் 80சதவீத வணிக நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு செல்கிறது.
புதிய பெரு வணிக கட்டடங்கள்,அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சுத்திகரிப்பு தொட்டி, அமைத்து கழிவுநீரை வெளியேற்ற வேண்டும் என்ற அடிப்படை விதிகளைகடைப்பிடிக்காமல் பாதாள சாக்கடையில் நேரடியாக இணைப்பு கொடுக்கின்றனர்.
பழுதடைந்த மின் கேபிள்களால்,அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.வணிக கட்டடம், தங்கும் விடுதிகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளை பின்பற்றாமல் நகராட்சி நிர்வாகம் டிரேடு லைசென்ஸ் வழங்குகிறது.
கொசு உற்பத்திஅதிகமாகி,டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பரவி மக்கள் உயிரிழக்கின்றனர்.நோயாளிகள் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காமல் உள்ளனர்.
தெருநாய் மற்றும் கால்நடைகள் வீதிகளில் சுற்றி திரிகின்றன.
தெருநாய் கடியால் பொதுமக்கள் தினமும் பாதிக்கபடுகின்றனர்.சாலை ஆக்கிரமிப்பால்,போக்குவரத்து நெரிசல்,விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போதிய காவலர்கள் பணியில் இல்லை. விபத்து மற்றும் குற்றங்களை கண்காணிக்க சி.சி.டி.வி., கேமராக்கள் இல்லாததால், காவல்துறையினர் திணறுகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்தெரிவித்துள்ளார்.