/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இ-கே.ஒய்.சி.,திட்டத்திற்காக பொது சேவை மையங்கள் வார விடுமுறை நாட்களிலும் செயல்படவேண்டும்

ADDED : ஆக 21, 2025 11:44 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் இ-கே.ஒய்.சி., திட்டத்தில் மக்களும் பயன்பெறும் வகையில் பொதுசேவை மையங்கள் வார விடுமுறை நாட்களிலும்திறந்திருக்க எடுக்க வேண்டுமென அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கலெக்டருக்கு அளித்துள்ள மனு:
ஐகோர்ட் உத்தரவின்படியும் உணவு மற்றும் பொது விநிநோயக அமைச்சகத்தின் அறிவுறுத்தல்படியும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் இ-கே.ஒய்.சி., சரிபார்ப்பு பணி, பொதுசேவை மையங்களில் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது. இது அனைத்து அரசு சலுகைகளும் சரியான பயனாளிகளை சென்றடைகிறதா என்பதை கண்காணிக்கவே இந்த முறை மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக ரேஷன் அட்டைகளில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நேரில் சென்று இந்த மின்னனு சரிபார்ப்பு முறையை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பொதுசேவை மையங்கள் காலை 9;00 மணிமுதல் மாலை 6;00 மணி வரை மட்டும் இயங்குகின்றன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே புதுச்சேரி மாநிலத்தில் இந்த இ. கே.ஒய்.சி., சரிபார்க்கும் முறை முடியும் வரையில் அனைத்து பொது சேவை மையங்களும் இரவு 8;00 மணி வரை திறந்திருக்கவும். மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுசேவை மையங்கள் வரும் செப்டம்பர் மாதம் இறுதிவரை திறந்திருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.