தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டி; புதுச்சேரி மாணவி 4 தங்கம் வென்று சாதனை

காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டி; புதுச்சேரி மாணவி 4 தங்கம் வென்று சாதனை

காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டி; புதுச்சேரி மாணவி 4 தங்கம் வென்று சாதனை


ADDED : அக் 17, 2024 12:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2024 12:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் வளு துாக்கும் பிரிவில் புதுச்சேரி மாணவி 4 தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 3ம் தேதி முதல் 16ம் தேதி வரை காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், இந்தியா அணி சார்பில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இந்திய பவர்லிப்டிங் (வளு துாக்கும்) பிரிவில் 42 பேர் கலந்து கொண்டனர்.

வளு துாக்கும் இந்திய அணியின் பயிற்சியாளராக, புதுச்சேரி கால்நடை பராமரிப்பு துறை முதுநிலை எழுத்தர் பாக்கியராஜ் கலந்து கொண்டார். இவரது தலைமையிலான அணியினர் மொத்தம் 13 பதக்கம் வென்றனர்.

இந்திய அணியில், புதுச்சேரி வேல்ராம்பட்டு, துலுக்காணத்தம்மன் நகர், 3வது குறுக்கு வீதியில் வசிக்கும் பாரதிதாசன் கல்லுாரி மாணவி அனுஷ்யா, 76 கிலோ பிரிவில் பங்கேற்றார். ஸ்குவார்டு, பெஞ்ச், டெத் லிப்ட் மற்றும் ஒட்டுமொத்த பிரிவில் 4 தங்கம் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். புதுச்சேரி திரும்பிய மாணவி அனுஷ்யாவை பெற்றோர், உறவினர், கல்லுாரி ஆசிரியர்கள், சக மாணவிகள் வாழ்த்தி பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us