/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால் துறைமுகம் மூலம் கூடுதல் வருவாய் அரசுக்கு இந்திய கம்யூ., வலியுறுத்தல்

ADDED : பிப் 17, 2024 11:39 PM
புதுச்சேரி: இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம் விடுத்துள்ள அறிக்கை:
காரைக்கால் துறைமுகம் மூலம் இந்த நிதியாண்டில் ரூ. 12.86 கோடி வருவாய் வந்திருப்பதாக முதல்வர் ரங்கசாமி பெருமிதம் கொள்கிறார்.
காரைக்காலில் முதலில் மார்க் நிறுவனம் தான் புதுச்சேரி அரசுடன் ஒப்பந்தம் போட்டு துறைமுகத்தை கட்டியது. மார்க் துறைமுகம் நஷ்டம் அடைந்ததால், அதனை அதானி நிறுவனம் காரைக்கால் துறைமுகத்தை கைப்பற்றியது.
அந்த துறைமுகம் புதுச்சேரி அரசுக்கு சொந்தமான 600 ஏக்கர் நிலத்தில் செயல்பட்டு நல்ல லாபத்துடன் இயங்குகிறது.
அங்கிருந்து நாகூருக்கு ரயில் பாதை உள்ளது. தற்போது பேரளத்திற்குச் சென்று திருச்சிக்கு செல்லும் புதிய ரயில் பாதையும், விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையும் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த போக்குவரத்து கட்டமைப்பு மூலம் பல ஆயிரம் கோடி வருமானத்தை அதானி நிறுவனம் அள்ளி குவிக்கிறது. ஆனால், வெறும் 12.86 கோடி வருவாய் என்பது யானை பசிக்கு சோளப்பொறி போன்றது.
இந்த துறைமுகத்திற்கு 1 சதவீதம் செஸ் வரி விதித்தாலே ஒரு ஆண்டிற்கு ரூ. 1,000 கோடி வருவாய் கிடைக்கும். எனவே, புதுச்சேரி அரசு காரைக்கால் துறைமுகத்தை அதானி நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தத்தில், ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய் வருவாய் வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.