/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாஸ்பேட்டை மைதானத்தில் துப்புரவு பணி சமுதாய கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பு
/
லாஸ்பேட்டை மைதானத்தில் துப்புரவு பணி சமுதாய கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பு
லாஸ்பேட்டை மைதானத்தில் துப்புரவு பணி சமுதாய கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பு
லாஸ்பேட்டை மைதானத்தில் துப்புரவு பணி சமுதாய கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பு
ADDED : ஏப் 13, 2025 05:25 AM

புதுச்சேரி : லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தில் தீவிர துப்புரவு பணி நடந்தது.
பெஞ்சல் புயலின்போது ஏராளமான மரங்கள் லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானம் மற்றும் அதனை சுற்றிலுள்ள பகுதிகளில் முறிந்து விழுந்த நிலையில், அப்பகுதியில் மீண்டும் பசுமையை ஏற்படுத்த தினமலர் நாளிதழ் முயற்சி எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஹெலிபேடு மைதானத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மரக்கன்று நடும் திட்டத்தையொட்டி ெஹலிபேடு மைதானம் முழுதும் தீவிர துப்புரவு பணியும் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு கல்லுாரி நிறுவனங்கள் கரம் கோர்த்து துாய்மை பணியில் ெஹலிபேடு மைதானத்தில் தீவிர துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், தினமலர் நாளிதழ், புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லுாரி, உழவர்கரை நகராட்சி சார்பில், நேற்று தீவிர துப்புரவு பணி நடந்தது. பல்வேறு குழுக்களாக பிரிந்த சமுதாய கல்லுாரி உடற்கல்வித் துறை மாணவர்கள் ஸ்கேட்டிங் மைதானத்தை சுற்றிலும் சிதறி கிடந்த குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தினர்.
கல்லுாரி முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தீவிர துப்புரவு முகாமை துவக்கி வைத்தார்.
அவர் பேசுகையில், 'இவ்வளவு பெரிய மைதானம் புதுச்சேரியில் இருப்பது நமக்கு பெருமை. இதனை துாய்மையாக வைத்துக்கொள்ளுவது இம்மைதானத்தை பயன்படுத்திக்கொள்ளும் அனைவரது கடமை. இம்மைதானத்தில் பசுமையை மீட்க தினமலர் சார்பில், மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது பாராட்டுக்குரியது.
இந்த முயற்சியில் அனைவரும் கரம் கோர்த்து, லாஸ்பேட்டை மைதானத்தில் பசுமை சூழலை மீட்டெடுக்க வேண்டும். சமூக பொறுப்புடனும் குப்பைகளை குப்பை தொட்டியில் போட வேண்டும்' என்றார்.
நிகழ்ச்சியில் உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் அறிவுறுத்தலின் பேரில், இளநிலை பொறியாளர்கள் சேகர், ஜெய்சங்கர், சுகாதார ஆய்வாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

