ADDED : பிப் 14, 2025 04:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: நரம்பை கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட சமுதாய நல கூடம் திறக்கப்பட்டது.
ஏம்பலம் தொகுதி நரம்பை கிராமத்தில், பாழடைந்த நிலையில் இருந்த சமுதாய நலக்கூடத்தை, காட்டுக்குப்பம் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., நிதியின் மூலம் ரூ. 13 லட்சம் மதிப்பிட்டில் புதுப்பிக்கும் பணி நடந்தது.
அதற்கான பணிகள் நிறைவடைந்து, திறப்பு விழா நேற்று நடந்தது. சப் கலெக்டர் அங்கீத்குமார் சமுதாய நல கூடத்தை திறந்து வைத்து பேசினார். கோத்ரேஜ் நிறுவன பொது மேலாளர் சுகுமார் தலைமை தாங்கினார்.
பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் தமிழ்அமுதன், கிராம நிர்வாக அதிகாரி ரகுநாதன், கோத்ரேஜ் நிறுவன மண்டல அதிகாரி குமரகுருபரன், அலுவலர்கள் குமரகுரு, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நரம்பை கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

