ADDED : செப் 09, 2026 05:51 PM
புதுச்சேரி: ரெட்டியார்பாளையத்தில் தனியார் கம்பெனி ஊழியரிடம் ரூ. 1 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சைபர் கிரைம் கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, மேரி உழவர்கரை, டைமண்ட் நகரைச் சேர்ந்தவர் ரகு, 58; தனியார் கம்பெனி ஊழியர். இவரை கடந்த 4ம் தேதி தொடர்பு கொண்ட மர்மநபர், வில்லியனுாரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரி போல் பேசி, உங்களுடைய ஏ.டி.எம்., கார்டை புதுப்பிக்க வேண்டுமென கூறியுள்ளார்.
அதை நம்பிய ரகு, தனது வங்கி கணக்கின் அனைத்து விவரங்கள் மற்றும் ஓ.டி.பி.,யை தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 2 தவணைகளாக 1 லட்சத்து 7 ஆயிரத்து 177 ரூபாயை மர்மநபர்கள் எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ரகு அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
