/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.1 கோடி போலி மருந்துகள் புதுச்சேரியில் கம்பெனிக்கு 'சீல்'
/
ரூ.1 கோடி போலி மருந்துகள் புதுச்சேரியில் கம்பெனிக்கு 'சீல்'
ரூ.1 கோடி போலி மருந்துகள் புதுச்சேரியில் கம்பெனிக்கு 'சீல்'
ரூ.1 கோடி போலி மருந்துகள் புதுச்சேரியில் கம்பெனிக்கு 'சீல்'
ADDED : செப் 03, 2025 01:30 AM

புதுச்சேரி:புதுச்சேரியில், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவில் போலி மருந்துகள் விற்பதாக வந்த புகாரை தொடர்ந்து, மத்திய மருந்து தர ஆய்வு அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தி, போலி மருந்துகளை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், இந்த மருந்துகள் புதுச்சேரியில் இருந்து கொள்முதல் செய்தது தெரிந்தது.
மத்திய மருந்துகள் தர ஆய்வு அமைப்பின் மருந்துகள் ஆய்வாளர்கள், போலீசார் நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள 'கோல்டன் கேப்சூல்' என்ற மருந்து கம்பெனியில், நள்ளிரவு, 12:00 மணி வரை அதிரடி சோதனை நடத்தினர்.
அதில், உரிமம் இன்றி தயாரித்து வைத்திருந்த, 99 லட்சத்து 47,000 ரூபாய் மதிப்புள்ள போலி மாத்திரைகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், இந்த போலி மாத்திரைகள் புதுச்சேரி, பிச்சைவீரான்பேட்டையில் உள்ள 'நேச்சுரல் கேப்சுல் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்திலிருந்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
புதுச்சேரி மருந்து தர கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் வழக்கு பதிந்தனர். சப் கலெக்டர் ரிஷிதா ரதி உத்தரவில், கம்பெனிக்கு 'சீல்' வைக்கப்பட்டது.