/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நெற்பயிர்களுக்கு இழப்பீடு; விவசாய சங்கம் கோரிக்கை
/
நெற்பயிர்களுக்கு இழப்பீடு; விவசாய சங்கம் கோரிக்கை
ADDED : ஜன 09, 2024 07:06 AM
புதுச்சேரி : மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்க பொதுச்செயலாளர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை;
புதுச்சேரியில் நேற்று முன்தினம் கன மழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிற்கள், தரையோடு தரையாக மடிந்து, தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. பொன்னி, பி.பி.டி., நெல் ரகங்கள் மார்கழி கடைசி, தை மாத முதல் வாரம் அறுவடை செய்யப்படும். ஓரளவுக்கு நல்ல விலையும் கிடைக்கும் நேரத்தில், பருவம் தவறி பெய்த மழை விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
மழை மேலும் ஒரு வாரம் நீடிக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. மழை நின்றாலும், மடிந்து கிடக்கும் நெல் பயிர்களை அறுவடை செய்ய ஒரு மாதம் வரை ஆகும். இதனால் விளைச்சல் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.
எனவே, புதுச்சேரி வேளாண்துறை அதிகாரிகள், பாதிப்படைந்த பயிர்களை பார்வையிட்டு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.