/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இளநிலை பொறியாளர் பணிக்கு அக்., 27ம் தேதி போட்டி தேர்வு
/
இளநிலை பொறியாளர் பணிக்கு அக்., 27ம் தேதி போட்டி தேர்வு
இளநிலை பொறியாளர் பணிக்கு அக்., 27ம் தேதி போட்டி தேர்வு
இளநிலை பொறியாளர் பணிக்கு அக்., 27ம் தேதி போட்டி தேர்வு
ADDED : செப் 27, 2024 05:06 AM
புதுச்சேரி: பொதுப்பணியின் துறையின் இளநிலை பொறியாளர் மற்றும் ஓவர்சீர் பணிகளுக்கான போட்டி தேர்வு வரும் அக்.27 ம் தேதி நடக்கிறது.
பொதுப்பணித் துறையில் குரூப்-பி அரசிதழ் பதிவு பெறாத தொழில்நுட்ப பணியிடங்களான 99 ஜூனியர் இன்ஜினியர், 69 ஓவர்சீர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 7 ம் தேதி முதல் 31ம் தேதி வரை விண்ணப்பம் வரவேற்கப்பட்டது.
அதில், மொத்தம் 1,800 பேர் விண்ணப்பித்துள் ளனர். இவர்களுக்கான போட்டித் தேர்வு வரும் அக். 27ம் தேதி நடக்கும் என நிர்வாக சீர்திருத்த துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சார்பு செயலர் ஜெய்சங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;
பொதுப்பணித் துறை ஜூனியர் இன்ஜினியர், ஓவர்சீர் பணிகளுக்கு வரும் அக். 27ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை முதல் தாள், மாதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது.
இதற்கான ஹால்டிக்கெட்டில் விரைவில் டவுண் லோடு செய்து கொள்ளலாம்.
கூடுதல் விபரங்களுக்கு https://recruitment.py.gov.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.