sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஜிப்மரில் 454 நர்சிங் அதிகாரி பணிகளை நிரப்ப போட்டி தேர்வு; விண்ணப்பங்கள் வரவேற்பு

/

ஜிப்மரில் 454 நர்சிங் அதிகாரி பணிகளை நிரப்ப போட்டி தேர்வு; விண்ணப்பங்கள் வரவேற்பு

ஜிப்மரில் 454 நர்சிங் அதிகாரி பணிகளை நிரப்ப போட்டி தேர்வு; விண்ணப்பங்கள் வரவேற்பு

ஜிப்மரில் 454 நர்சிங் அதிகாரி பணிகளை நிரப்ப போட்டி தேர்வு; விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : ஜூலை 27, 2025 07:34 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஜிப்மரில் 454 நர்சிங் அதிகாரி பணியிடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.

நாடு முழுதும் எய்ம்ஸ் மர்றும் ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் 3,500 நர்சிங் அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.மருத்துவ பணியிடங்களை அதிகரிக்க ஜிப்மர் நிர்வாகம் மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு கோப்பு அனுப்பியது. 947 பணியிடங்கள் புதிதாக உருவாக்க கோப்பு அனுப்பப்பட்டதில், 557க்கு உருவாக்க மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

அதிகபட்சமாக 400 செவிலியர் அதிகாரி பணியிடங்களை உருவாக்க அனுமதி தந்தது.நாடு முழுதும் நிரப்ப உள்ள நர்சிங் பணியிடங்களில் புதுச்சேரி, ஏனாமில் தற்போது 454 நர்ஸ் பணியிடங்களை பூர்த்தி செய்ய முடிவு செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நர்சிங் அதிகாரி பொது தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்போர் 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம்ஆக., 11ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி., பிரிவுக்கு ரூ. 3 ஆயிரம், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் இ.டபுள்.யூ.எஸ் பிரிவுக்கு ரூ. 2400ம் செலுத்த வேண்டும். ஆன்லைனில் முதல்நிலைத் தேர்வு செப்., 14ம் தேதியும், மெயின் தேர்வு செப்., 27ம் தேதியும் நடக்கும். புதுச்சேரியில் 446 பணியிடங்களும், ஏனாமில் 8 பணியிடங்களும் தேர்வுகள் மூலமாக நிரப்பப்படும்.கூடுதல் தகவல்களுக்கு www.jipmer.edu.in என்ற ஜிப்மர் இணையத்தில் வேலைவாய்ப்பு பிரிவை பார்க்கலாம்.

இட ஒதுக்கீடு வாரியாக

புதுச்சேரி ஜிப்மரில் 446 இடங்களை நிரப்ப தேர்வு நடக்கிறது. புதுச்சேரியில் பொதுப்பிரிவில் பெண்-144, ஆண்--36 என, 180 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஓ.பி.சி., பிரிவில் 121 இடங்களில் பெண்கள்- 97, ஆண்-24 என 121 சீட்டுகள் நிரப்பப்பட உள்ளது.எஸ்.சி., பிரிவில் 63 இடங்களும் பெண் -51, ஆண்--12 என 63 இடங்களும், எஸ்.டி., பிரிவில் பெண் -27, ஆண் -6 என 33 இடங்கள், இ.டபுள்.யூ.எஸ்., பெண்கள் -40, ஆண்கள்- 9 என, 49 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. உள் ஒதுக்கீட்டாக மாற்றுத்திறனாளிகளுக்கு பெண்கள் -32, ஆண்கள் -7என 39 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us