/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒப்பந்தம் முடிந்த பிறகும் கடையை காலி செய்ய மறுப்பதாக மாஜி அமைச்சர் மீது புகார்
/
ஒப்பந்தம் முடிந்த பிறகும் கடையை காலி செய்ய மறுப்பதாக மாஜி அமைச்சர் மீது புகார்
ஒப்பந்தம் முடிந்த பிறகும் கடையை காலி செய்ய மறுப்பதாக மாஜி அமைச்சர் மீது புகார்
ஒப்பந்தம் முடிந்த பிறகும் கடையை காலி செய்ய மறுப்பதாக மாஜி அமைச்சர் மீது புகார்
ADDED : ஆக 21, 2025 11:00 AM
புதுச்சேரி: புதுச்சேரியில், ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் கடையை காலி செய்ய மறுத்த முன்னாள் அமைச்சர் தனக்கு மிரட்டல் விடுத்து வருவதாக, பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி, பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் மூர்த்தி பால்ராஜ்,75; பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். இவருக்கு, அம்பலத்தடையார் மடம் வீதியில் 2,200 சதுர அடி வணிக வளாகம் உள்ளது. அதன் மதிப்பு ரூ.5 கோடி.
இந்த வணிக வளாகத்தின் கீழ்தளத்தில், தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் குத்தகை அடிப்படையில் நகைக்கடை நடத்தி வருகிறார். குத்தகை ஒப்பந்தம் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் முடிந்துவிட்டதால், மூர்த்தி பால்ராஜ் கடையை காலி செய்யுமாறு கூறினார். ஆனால் அவர், கடையை காலி செய்யாமல், மூர்த்தி பால்ராஜ் வங்கி கணக்கில் வாடகை பணத்தை செலுத்தி வருகிறார்.
இதற்கிடையே, மூர்த்தி பால்ராஜின் மனைவி இறந்ததை தொடர்ந்து, தனது சொத்துக்களை விற்றுவிட்டு, பிரான்ஸ் செல்ல முடிவு செய்து, மாஜி அமைச்சரிடம் கடையை காலி செய்யுமாறு கூறினார். அதற்கு அவர் மறுத்ததாககூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் மூர்த்தி பால்ராஜ், பெரியக்கடை போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால், வழக்கு பதிவு செய்யவில்லை.
இந்நிலையில், மூர்த்தி பால்ராஜ், தனது இடத்தில் நகை கடை நடத்தி வரும் முன்னாள் அமைச்சர், கடையை காலி செய்யாமல் தன்னை மிரட்டி வருவதாக கண்ணீருடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். முன்னாள் அமைச்சரிடம் இருந்து தனது கடையை மீட்டு தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.