நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பகலில் எரியும் மின் விளக்கு
மூலக்குளம், வெரோனஸ் நகரில் தெரு மின் விளக்குகள் இரவு - பகலாக தொடர்ந்து எரிந்து வருகிறது.
கமல்ராஜ், மூலக்குளம்.
உழவர்கரை, ஜெயா நகர் மேற்கு பகுதியில் தெருமின் விளக்குகள் பகலில் எரிந்து வருகிறது.
பெருமாள், உழவர்கரை.
சுகாதார சீர்கேடு
தட்டாஞ்சாவடி, சுப்பையா நகர், சேக்கிழார் அரசு பள்ளி அருகே வாய்க்கால் அடைப்பு காரணமாக, கழிவுநீர் சாலையில் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
மனோன்மணி, தட்டாஞ்சாவடி.
விஷ ஜந்துகள் நடமாட்டம்
உழவர்கரை பாலாஜி நகர், 4வது மற்றும் 5வது குறுக்குத் தெரு காலி மனைகளில் செடிகள் வளர்ந்து புதர்மண்டி விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
புவனேஸ்வரி, உழவர்கரை.