
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போக்குவரத்திற்கு இடையூறு
முருங்கப்பாக்கத்தில் இருந்து வில்லியனுார் செல்லும் சாலையில் அங்காளம்மன் கோவில் அருகே வாய்க்காலில் அள்ளப்படும் மண் சாலைஓரத்தில் கொட்டப்பட்டுள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
மதிவாணன், முருங்கப்பாக்கம்.
மின் விளக்கு எரியவில்லை
காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகர் 9வது குறுக்கு தெருவில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியாமல் இருந்து வருகிறது.
முத்து, ரெயின்போ நகர்.
நாய் தொல்லை
பாகூர் கேசவ் நகரில் தெரு நாய்கள் அதிகமாகசுற்றி திரிவதால் நடந்து செல்லும் மக்கள்அச்சப்பட்டு வருகின்றனர்.
கஸ்துாரி, பாகூர்.
சாலை பணி மந்தம்
உழவர்கரை ஜவகர் நகரில் சாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
ஜானகி, பாகூர்.

