நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலை பள்ளங்களால் விபத்து
முத்திரையர்பாளையம், ஜீவா வீதியில் பள்ளங்கள் இருப்பதால், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
சரவணன், முத்திரையர்பாளையம்.
தெரு நாய் தொல்லை
கருவடிக்குப்பம், சாமிபிள்ளைத்தோட்டம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
விஜயா, சாமிபிள்ளைத்தோட்டம்.
குண்டும் குழியுமான சாலை
தவளக்குப்பம் அண்ணா நகரில், சாலை குண்டும், குழியுமாக மோசமான நிலையில் இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கதிரேசன், தவளக்குப்பம்.
சுகாதார சீர்கேடு;
நுாறடி சாலை, எல்லைப்பிள்ளைச்சாவடி, அரசு மகளிர் மருத்துவமனை வெளி பகுதியில், குப்பைகள் கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
பன்னீர், எல்லைப்பிள்ளைச்சாவடி.