நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலை மோசம்
மூலகுளத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
குமரேசன், சாலைத்தெரு.
மின் கம்பங்களில் கேபிள்களால் ஆபத்து
சின்ன மணிக்கூண்டு சந்திப்பில் உள்ள மின் கம்பங்களில் தாறுமாறாக கேபிள் ஒயர்கள் கட்டப்பட்டு உள்ளதால் வாகன விபத்து நடந்து வருகிறது.
பெருமாள், காந்தி வீதி.
போக்குவரத்து நெரிசல்
உப்பளம் சாலையில் மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கவியரசன், உப்பளம்.
குண்டும் குழியுமான சாலை
மணவெளி சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
குமரன், மணவெளி.
பயணியர் நிழற்குடை தேவை
மரப்பாலம் சந்திப்பில், பயணியர் நிழற்குடை இல்லாமல், மக்கள் வெயிலில் நின்றுஅவதிப்பட்டு வருகின்றனர்.
மாலதி, முதலியார்பேட்டை.