
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கழிவுநீர் தேங்கியுள்ளது காமராஜர் நகர் தொகுதி, வெங்கடேஸ்வரா நகர் 4வது குறுக்கு தெருவில், வாய்க்கால் அடைத்து, கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
செல்வராஜ், புதுச்சேரி. பள்ளத்தில் மழைநீர் வில்லியனுார் பாரதி நகர், ஆரியப்பாளையம் மெயின் ரோட்டில் பள்ளம் தோண்டி மூடாமல் இருப்பதால், மழைநீர் தேங்கி நிற்கிறது.
முருகன், வில்லியனுார். வாய்க்காலில் அடைப்பு காலாப்பட்டு வெண்ணிலா நகர் வாய்க்காலில் மண் அடைத்துள்ளதால், கழிவுநீர் தேங்கியுள்ளது.
ராஜேஸ்வரி, காலாப்பட்டு. சாலையில் மாடுகள் வில்லியனுார் பைபாசில் மாடுகள் நிற்பதால், வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
முருகேசன், வில்லியனுார். ஜிப்மருக்கு இரவில் பஸ் தேவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு இரவு நேரங்களில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
செல்வநாயகி, புதுச்சேரி.

