
மேம்பாலத்தில் மண் குவியல் வில்லியனுார் - ஆரியப்பாளையம் புதிய மேம்பாலத்தில் இருபுறத்திலும் மண் குவிந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ரஜினி முருகன், வில்லியனுார். 'குடிமகன்'களால் மக்கள் அச்சம் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை எதிரே உள்ள வி.வி.பி., நகர் செல்லும் வழியில், மது குடிப்பதால், நடந்து செல்லும் பெண்கள் அச்சமடைகின்றனர்.
ராணி, தட்டாஞ்சாவடி. சாலையில் மெகா பள்ளம் அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே சாலையில் மெகா பள்ளம் உள்ளதால், வாகன விபத்து ஏற்படுகிறது.
சந்திரன், அரியாங்குப்பம். குடிநீர் வீணாகிறது முத்தியால்பேட்டை, பெருமாள் கோவில் தெருவில் குடிநீர் வெளியேறி வீணாகிறது.
கவிதா, முத்தியால்பேட்டை. மாடுகள் தொல்லை ரெட்டியார்பாளையம், அஜிஸ் நகர் சீனுவாசா அப்பார்ட்மெண்டில் மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது.
ஆனந்தராணி, உழவர்கரை. குண்டும் குழியுமான சாலை செஞ்சி சாலையில் குண்டும், குழியுமாக இருப்பதால், பொதுமக்கள அவதிப்பட்டு வருகின்றனர்.
ராணி, புதுச்சேரி.

