ADDED : பிப் 12, 2026 04:26 AM
அ நிறம் | அளவு
குடிநீர் வீணாகிறது ராஜ்பவன் தொகுதி, குபேர் பாடசாலை தெருவில், குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் விரயமாகிறது. கல்யாணம், புதுச்சேரி. குண்டும் குழியுமான சாலை சாரம் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். வசந்தி, புதுச்சேரி.
நிழற்குடை தேவை உருளையன்பேட்டை மறைமலை அடிகள் சாலையில், நிழற்குடை இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். காந்தி, உருளையன்பேட்டை. டவுன் பஸ் தேவை தேங்காய்த்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். கணேசன், தேங்காய்த்திட்டு. மீன் கடைகளால் நெரிசல் உப்பளம் சாலையில் உள்ள மீன் கடைகளால் போக்குவரத்து நெரிசலில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். செல்வி, உப்பளம்.
