நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா? புதுச்சேரி, சாரம் லெனின் வீதி அவ்வை திடல் ஆக்கிரமிப்பில் உள்ளது.
கல்யாணம், சாரம். கழிவுநீர் தேக்கம் தேங்காய்த்திட்டு, பாவேந்தர் நகர் வாய்க்காலில், கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசு தொல்லை அதிகமாக உள்ளது.
செல்வராஜ், தேங்காய்த்திட்டு. போக்குவரத்து நெரிசல் வில்லியனுார், சுல்தான்பேட்டை சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ரஜினிமுருகன், வில்லியனுார். மக்கள் அச்சம் தட்டாஞ்சாவடி- கோரிமேடு சாலையில் மதுபிரியர்கள் மது அருந்துவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கண்ணதாசன், தட்டாஞ்சாவடி. சுகாதார சீர்கேடு தவளக்குப்பம், ஒத்தவாடை வீதியில், மின் அலுவலகம் எதிரில் குப்பைகள் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மணிவண்ணன், தவளக்குப்பம்.

