ADDED : பிப் 14, 2026 04:34 AM
அ நிறம் | அளவு
துர்நாற்றம் வில்லியனுார் கிருஷ்ணா நகரில் குப்பைகள் தேங்கியுள்ளதால், துர்நாற்றம் வீசி வருகிறது. கமலா, கிருஷ்ணா நகர். மீன் கடைகளால் இடையூறு உப்பளம் சாலையில், மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
அம்பேத்கர், உப்பளம். நாய்கள் தொல்லை முதலியார்பேட்டையில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், வாகன விபத்துகள் நடக்கிறது. கணபதி, முதலியார்பேட்டை. சாலை படுமோசம் பூமியான்பேட்டை சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பார்த்திபன், பூமியான்பேட்டை. நிழற்குடை தேவை மரப்பாலத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாமல் பொதுமக்கள் வெயிலில் அவதிப்பட்டு வருகின்றனர். சுரேஷ், மரப்பாலம்.
