
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குண்டும் குழியுமான சாலை தட்டாஞ்சாவடி, தொழிற்பேட்டை எதிரே உள்ள வி.வி.பி., நகர் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
பாஸ்கர், தட்டாஞ்சாவடி. நாய்கள் தொல்லை மோத்திலால் நகரில், தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
கண்ணகி, மோத்திலால் நகர். போக்குவரத்து நெரிசல் உப்பளம் சாலையில் மீன் கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கிருஷ்ணா, புதுச்சேரி. பைபாசில் திரியும் மாடுகள் அரும்பார்த்தபுரம் பைபாசில் மாடுகள் குறுக்கே செல்வதால் விபத்து ஏற்பட்டு வருகிறது.
இளங்கதிர், அரும்பார்த்தபுரம். நடைபாதை ஆக்கிரமிப்பு எஸ்.வி., பட்டேல் சாலையில் நடைபாதையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ராஜ்குமார், புதுச்சேரி. கொசு தொல்லை முருங்கப்பாக்கம் பகுதியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளதால், மருந்து அடிக்க வேண்டும்.
பாண்டியன், முருங்கப்பாக்கம்.

