மீன் கடைகளால் போக்குவரத்து பாதிப்பு உப்பளம் சாலை பழைய துறைமுகம் செல்லும் வழியில் சாலையை ஆக்கிரமித்து மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கண்ணன், உப்பளம். தோண்டிய பள்ளம் மூடாமல் உள்ளது ராஜ்பவன் சின்னசுப்புராய பிள்ளை வீதியில் பள்ளங்கள் தோண்டப்பட்டு மூடாமல் உள்ளன.
செல்வன், ராஜ்பவன். காலி மனையில் புதர்கள் முதலியார்பேட்டை மூகாம்பிகை நகர் 2வது மெயின் ரோடு, 3வது குறுக்கு தெருவில் காலிமனையில் புதர்கள் மண்டி கிடப்பதால், பாம்புகள் நடமாட்டம் உள்ளன.
ராஜன், முதலியார்பேட்டை தெரு நாய்கள் தொல்லை மூலக்குளம் சாலை தெருவில், தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
ராஜா, மூலக்குளம். போக்குவரத்து நெரிசல் கோரிமேடு செல்லும் சாலை தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலில் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பாரதிதாசன், புதுச்சேரி.

