தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி: சாலையில் ஜல்லி

புகார் பெட்டி: சாலையில் ஜல்லி

புகார் பெட்டி: சாலையில் ஜல்லி


UPDATED : ஏப் 28, 2026 07:49 PM

ADDED : ஏப் 28, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 28, 2026 07:49 PM ADDED : ஏப் 28, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

முத்தியால்பேட்டை வசந்த் நகர், நர்மதை வீதியில் ஜல்லி கொட்டப்பட்டுள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

விஜயலட்சுமி, முத்தியால்பேட்டை.

போக்குவரத்து நெரிசல்

ராஜ்பவன் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் போக்குவரத்து போலீசாரை நிறுத்த வேண்டும்.

கல்யாணம், புதுச்சேரி.

கழிவுநீர் தேக்கம்

காமராஜ் நகர் தொகுதி ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

தனலட்சுமி, ரெயின்போ நகர்.

நாய்கள் தொல்லை

தட்டாஞ்சாவடி, தொழிற்பேட்டை பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

காமாட்சி, தட்டாஞ்சாவடி.

குண்டும் குழியுமான சாலை

தட்டாஞ்சாவடி, தொழிற்பேட்டை எதிரே உள்ள வி.வி.பி., சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

நாராயணன், புதுச்சேரி.

நெல்லித்தோப்பு புவன்கரே வீதி, சித்தர் கோவில் அருகில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

புவனேஷ், நெல்லித்தோப்பு.

நிழற்குடை தேவை

மரப்பாலம் சந்திப்பில் பயணியர் நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பார்த்திபன், மரப்பாலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us