தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பகலில் எரியும் மின் விளக்குகள்

பகலில் எரியும் மின் விளக்குகள்

பகலில் எரியும் மின் விளக்குகள்


UPDATED : மே 21, 2026 06:44 PM

ADDED : மே 21, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2026 06:44 PM ADDED : மே 21, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செட்டிப்பட்டு மெயின் ரோட்டில் உள்ள மின்கம்பங்களில் அமைக்கப்பட்டுள்ள எல்.இ.டி., மின் விளக்குகள் பகலில் எரிந்து வருகிறது.

சங்கர், செட்டிப்பட்டு.

ஏரிக்கரையில் இறைச்சி கழிவுகள்

சித்தலம்பட்டு - கொடுக்கூர் செல்லும் ஏரிக்கரையில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால், அப்பகுதி முழுதும் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.

கண்ணன், கொடுக்கூர்.

பள்ளத்தால் விபத்து அதிகரிப்பு

அய்யங்குட்டிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சாலையின் நடுவே உள்ள மெகா சைஸ் பள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.

குமரன், புதுச்சேரி.

வாகன ஓட்டிகள் அவதி

செல்லிப்பட்டு - மண்ணாடிப்பட்டு செல்லும் சாலையில் உள்ள வேகத்தடைகளுக்கு வண்ணம் பூசப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மஞ்சு, வாதானுார்.

ஏரியை துார்வார வேண்டும்

முதலியார்பேட்டை வேல்ராம்பட்டு ஏரியை துார் வார வேண்டும்.செல்வன், முதலியார்பேட்டை.

தெரு நாய்கள் தொல்லை

புதுச்சேரி குமரகுருபள்ளம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

சாய் அர்ஜூன், புதுச்சேரி.

பயணியர் நிழற்குடை தேவை

மரப்பாலம் சந்திப்பில் பயணியர் நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

காந்தி, புதுச்சேரி.

சாலையில் மண் குவியல்

கடலுார் சாலை, அரியாங்குப்பத்தில் இருந்து தவளக்குப்பம் வரை மண் குவிந்து கிடப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஜெயலட்சுமி, புதுச்சேரி.

பைபாசில் திரியும் மாடுகள்

அரும்பார்த்தபுரம் பைபாசில் மாடுகள் நிற்பதால், வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

கிருஷ்ணா, அரும்பார்த்தபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us