UPDATED : ஜூன் 18, 2026 07:54 PM
ADDED : ஜூன் 18, 2026 07:53 PM
உழந்தை கீரப்பாளையம் புவன்கரே - மேஸ்திரி வீதி சந்திப்பில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
புவனேஷ், முதலியார்பேட்டை.
கழிவுநீர் தேக்கம்
புதுச்சேரி இ.சி.ஆரில், உள்ள தனியார் வங்கி எதிரே செல்லும் வாய்க்காலில் குப்பைகள் அடைத்து, கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
புவனேஷ், முதலியார்பேட்டை.
போக்குவரத்து இடையூறு
தருமாபுரி - வழுதாவூர் மெயின் ரோட்டில் சிமென்ட் காரை, ஜல்லிகள் கிடப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
செழியன், தருமாபுரி.
குண்டும் குழிமான சாலை
முதலியார்பேட்டை மரப்பாலம் - வண்ணாங்குளம் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
செல்வம், நைனார்மண்டபம்.
குடிமகன்களால் அச்சம்
தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் இரவில் மது குடிப்பதால், அவ்வழியாக செல்பவர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
மீனாட்சி சுந்தரம், புதுச்சேரி.
சாலையில் மண் குவியல்
கடலுார் சாலை அரியாங்குப்பத்தில் இருந்து தவளக்குப்பம் வரை சாலையில் இருபுறத்தில் மண் குவிந்து கிடப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மணிவண்ணன், அரியாங்குப்பம்.
