UPDATED : செப் 06, 2026 05:23 PM
ADDED : செப் 06, 2026 05:22 PM
ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் - புதுநகர் இடையில் பயணியர் நிழற்குடை இல்லாமல் மக்கள் வெயில் அவதியடைந்து வருகின்றனர்.
சந்திரசேகரன், ரெட்டியார்பாளையம்.
விஷ பூச்சிகள் நடமாட்டம்
தந்தை பெரியார் நகர் 7வது குறுக்கு தெருவில் உள்ள காலி மனையில் புதர்கள் மண்டி கிடப்பதால் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது.
பாஸ்கர், புதுச்சேரி.
சாலை படுமோசம்
முதலியார்பேட்டை, காரமணிக்குப்பம் சாலை படுமோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிடைந்து வருகின்றனர்.
ரஜினிமுருகன், வில்லியனுார்.
டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதி
புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு இரவில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து, வருகின்றனர்.
பாரதிதாசன், புதுச்சேரி.
போக்குவரத்து இடையூறு
வேல்ராம்பட்டு மெயின் ரோட்டில் தோண்டப்பட்ட பள்ளம் மூடாமல் உள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
கோவிந்தராஜ், வேல்ராம்பட்டு.
சாலை படுமோசம்
காமராஜர் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
சம்பத், புதுச்சேரி.
மரக்கிளைகளால் இடையூறு
காமராஜர் சாலை அவ்வை திடலில் இருந்து பெரியார் சிலை வரை, தெரு விளக்குகள் மீது மரக்கிளைகள் சூழ்ந்து இருப்பதால் இரவில் அப்பகுதி இருளாக உள்ளது.
சுரேஷ், சாரம்.
சாலையில் தேங்கும் கழிவுநீர்
மங்கலம் பகுதியில் சைடு வாய்க்கால் இல்லாமல் உள்ளதால் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.
ராஜேஷ்,மங்கலம்.
