UPDATED : செப் 09, 2026 05:50 PM
ADDED : செப் 09, 2026 05:43 PM
அ நிறம் | அளவு
வில்லியனுாரில் விதியை மீறி தாறுமாறாக வாகனங்கள் செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரஜினிமுருகன், வில்லியனுார்.
பாலம் படுமோசம்
வில்லியனுார் ஆரியப்பாளையம் - வடமங்கலம் செல்லும் சாலையில் உள்ள பழைய பாலம் மோசனமான நிலையில் உள்ளது.
அஸ்ரப், வில்லியனுார்.
கட்டடம் சேதம்
ராஜ்பவன் பாரதி வீதியில் பழைய கட்டடம் சேதமடைந்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
வித்யா, புதுச்சேரி.
'குடிமகன்'களால் அச்சம்
நோணாங்குப்பம் பழைய பாலத்தில் இரவில் மது குடிப்பதால் அவ்வழியே செல்லும் மக்கள் அச்சமடைகின்றனர்.
கண்ணன், நோணாங்குப்பம்.
பாம்புகள் நடமாட்டம்
பிருந்தாவனம் 7வது குறுக்கு தெருவில் உள்ள காலிமனையில் புதர்கள் மண்டி கிடப்பதால் பாம்புகள் நடமாட்டம் உள்ளது.
ரமேஷ், புதுச்சேரி.
