ADDED : செப் 25, 2026 05:42 PM
அ நிறம் | அளவு
தெரு விளக்கு எரியுமா?: மரப்பாலம் பெருமாள் கோவில் வீதி வரை சென்டர் மீடியனில் தெரு விளக்கு எரியாமல் உள்ளது.
செல்வன், முதலியார்பேட்டை.
அடிக்கடி மின் தடை
அரியாங்குப்பத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கண்மணி, அரியாங்குப்பம்.
தெரு நாய்கள் தொல்லை
மணவெளி பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
சுபாஷ், மணவெளி.
‘குடிமகன்’களால் அச்சம்
அரியாங்குப்பம் – வீராம்பட்டினம் சாலையில் அமர்ந்து குடிமகன்கள் மது குடிப்பதால், அவ்வழியே செல்லும் மக்கள் அச்சமடைகின்றனர்.
மனோகர், அரியாங்குப்பம்.
டவுன் பஸ் தேவை
தேங்காய்த்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் இல்லாமல் உள்ளதால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பாஸ்கர், தேங்காய்த்திட்டு.
