/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., வினர் மீது காங்., போலீசில் புகார்
/
பா.ஜ., வினர் மீது காங்., போலீசில் புகார்
ADDED : செப் 02, 2025 03:32 AM

புதுச்சேரி: லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி புகைப்படத்தை அவமதிப்பு செய்த பா.ஜ., நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரியக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரிடம் காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., ஆனந்தராமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி மாநில பா.ஜ., தலைவர் ராமலிங்கம் தலைமையில் நிர்வாகிகள், புதுச்சேரி காங்., அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் ராஜா தியேட்டர் சிக்னல் அருகே தடுத்து நிறுத்தினர்.
இந்த ஊர்வலத்தின் போது சட்டம் ஒழுங்கு சீர்குலையும் வகையிலும், வன்முறையை தூண்டுகின்ற வகையிலும், கலவரத்தை துாண்டும் வகையில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புகைப்படத்தை அவமரியாதை செய்து, கிழித்து காலணிகளால் அடித்தும் தீ வைத்து எரித்து கீழ்தரமாக அவருடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக நடந்துள்ளனர்.
இந்த செயல் புதுச்சேரி காங்., நிர்வாகிகளிடையே கொந்த ளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. அதனால், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புகைப்படத்தை அவமதிப்பு செய்த பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.