தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார்

புகார்

புகார்


ADDED : ஆக 16, 2026 05:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 05:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாகன ஓட்டிகள் அவதி: லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகர் மெயின் ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.

சதாம் உசேன், கிருஷ்ணா நகர்.

குடிமகன்களால் அச்சம் : தட்டாஞ்சாவடி, தொழிற்பேட்டையில் திறந்த வெளியில் சிலர் மது அருந்துவதால், அங்கு பணி புரியும் ஊழியர்கள் அச்சப்படுகின்றனர்.

மஞ்சுளா, தட்டாஞ்சாவடி.

விபத்து அபாயம் : இந்திரா, ராஜிவ் சதுக்கங்களில் சிக்னல் போட்டிருந்தாலும், சில வாகன ஓட்டிகள் விதி மீறி செல்வதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

ராஜா, கொட்டுப்பாளையம்.

பஸ் நிறுத்தம் அருகே பள்ளம்: வழுதாவூர் – திருக்கனுார் சாலையில் வழுதாவூர் பஸ் நிறுத்தம் அருகே மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

மணிமேகலை, வழுதாவூர்.

சாலை போடப்படுமா?: கருவடிக்குப்பம், சண்முகா நகர் மூன்றாவது தெருவில், செம்மண் கொட்டி ஒரு ஆண்டாகியும், தார் சாலை, பாதாள சாக்கடை அமைக்கப்படாததால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

பிரமிளா, கருவடிக்குப்பம்.

தெரு விளக்கு எரியுமா?: அபிேஷகப்பாக்கம் முதல் தேடுவார்நத்தம் வரை இரவு நேரங்களில் தெருமின் விளக்குகள் எரியாமல் இருள்சூழ்ந்து காணப்படுவதால், பொது மக்கள் அச்சமடைகின்றனர்.

சரண்ராஜ், தேடுவார்நத்தம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us