sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் முழு அடைப்பு விளக்க கருத்தரங்கம்

புதுச்சேரியில் முழு அடைப்பு விளக்க கருத்தரங்கம்

புதுச்சேரியில் முழு அடைப்பு விளக்க கருத்தரங்கம்


ADDED : மே 09, 2025 12:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2025 12:10 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அனைத்து தொழிற்சங்கம் சார்பில், மே 20ம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் முழு அடைப்பு விளக்க கருத்தரங்கம் சுதேசி மில் அருகில் நடந்தது.

ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். சி.டி.டி.யூ., மாநில செயலாளர் சீனுவாசன், ஐ.என்.டி.யூ.சி., மாநில பொதுச் செயலாளர் ஞானசேகரன், எல்.பி.எப்., மாநில அமைப்பாளர் அண்ணா அடைக்கலம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில், புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்.

அமைப்புசாரா தொழிலாளர், ஒப்பந்த தொழிலாளர், திட்டம் சார்ந்த தொழிலாளர் உட்பட அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 மாதத்திற்கு நிர்ணயம் செய்ய வேண்டும். ஒப்பந்த, தினக்கூலி, வெளிச்சந்தை முறை, பயிற்சியாளர் போன்ற ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

அமைப்பு சாரா தொழிலாளர் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 9,000 மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us