/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கணினி அறிவியல் துறை மாணவர் சங்கம் துவக்கம்
/
கணினி அறிவியல் துறை மாணவர் சங்கம் துவக்கம்
ADDED : செப் 20, 2025 06:55 AM

புதுச்சேரி : லாஸ்பேட்டை, தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கணினி அறிவியல் துறை சார்பில் 2025-26ம் ஆண்டிற்கான மாணவர் சங்கம் துவங்க விழா நடந்தது.
விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் கருப்பசாமி தலைமை தாங்கி, குத்துவிளங்கேற்றி மாணவர் சங்கத்தை துவக்கி வைத்தார். துறைத் தலைவர் முருகன் வரவேற்றார்.
விழாவில், லெனோவோ நிறுவனத்தை சேர்ந்த, கல்லுாரியின் முன்னாள் மாணவர் இளங்கோ சுப் ரமணி, மாணவர்கள் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை கற்று, தங்களை தயார்படுத்தி கொள்ள வே ண்டும்.
மேலும், லீன் சிக்ஸ் சிக்மா தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
விழாவையொட்டி, நடந்த தொழில்நுட்ப வினாடி - வினா போட்டி யில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவி சகானா நன்றி கூறினார்.