/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அலயன்ஸ் பிரான்சேவில் இன்று இசை நிகழ்ச்சி
/
அலயன்ஸ் பிரான்சேவில் இன்று இசை நிகழ்ச்சி
ADDED : ஏப் 11, 2025 04:03 AM
புதுச்சேரி: பிரெஞ்சு பெண் பாடகரின் நினைவாக புதுச்சேரி, அலயன்ஸ் பிரான்சே-வில் இன்று மாலை இசை நிகழ்ச்சி நடக்கிறது.
இதுகுறித்து பிரெஞ்ந்திய வீணை கலைஞரும், செவாலியே விருதாளரான ரகுநாத் மனோ நிருபர்களிடம் கூறியதாவது;
எடித் கியோவன்னா காசியன் எனும் இயற்பெயரை கொண்டவர் எடித் பியாப். பிரெஞ்சு பெண் பாடகர். இவரது பிரெஞ்சு பாடல்கள் மிகவும் புகழ்மிக்கது. குறிப்பாக 'பதம்...பதம்' என்ற பாடல் மிக பிரபலமானது. அவரது நினைவாக, அவரது பிரபலமான 'பதம்... பதம்' என்ற பாடலின் தலைப்பில் இன்று 11ம் தேதி இரவு 7:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை அலயன்ஸ் பிரான்சே-வில் இசை நிகழ்ச்சி நடக்கிறது. அதில், வீணை, பாட்டு, நாட்டியம் நடைபெறும்.
மேலும், வீணை கலையை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும். பிரான்சில் நடைபெறும் கேல் விருதுக்கு தமிழ் படங்கள் செல்வதில்லை. பன்முக கலைஞர்களை இணைத்து தரமான படத்தை உருவாக்க வேண்டும்' என்றார்.

