/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடலில் துாண்டில் முள் வளைவு அமைக்க காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
/
கடலில் துாண்டில் முள் வளைவு அமைக்க காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கடலில் துாண்டில் முள் வளைவு அமைக்க காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கடலில் துாண்டில் முள் வளைவு அமைக்க காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 11, 2024 11:57 PM

புதுச்சேரி: காலாப்பாட்டு மீனவ கிராமங்களில்கடல் அரிப்பை தடுக்க துாண்டில் வளைவு அமைக்க கோரி காங்., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஷாஜகான் தலைமை தாங்கினார். மீனவர் அணி தலைவர் பாஸ்கர் வரவேற்றார்.காங்., மாநில தலைவர் வைத்தியலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி,முன்னாள் எம்.எல்.ஏ.,அனந்தராமன்,வடக்கு மாவட்ட காங்., துணை தலைவர் பெருமாள், காலாப்பட்டு தொகுதி வட்டார காங்.,தலைவர் முகுந்தன், காலாப்பட்டு காங்., மீனவர் அணி நிர்வாகிகள் மூர்த்தி,செல்வம்,மதியழகன் உள்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன கோஷம் எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின்போது மீனவ மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். கடல் எல்லை குறித்து மத்திய அரசு தயாரிக்கும் வரைபடம் சம்பந்தமாக மீனவ மக்களின் கருத்துக்களை கேட்டு அறிய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., கூறும்போது, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், கடல் அரிப்பை தடுப்பதற்காக பெரிய அளவில் கற்கள் கொட்டாமல் சிறிய கற்கள் கொட்டியதால் அனைத்தும் கடலில் அடித்து செல்லப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் கற்கள் கொட்டியதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதன் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.