/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இரங்கல் தீர்மானம் கண்ணனின் மகன் நன்றி
/
இரங்கல் தீர்மானம் கண்ணனின் மகன் நன்றி
ADDED : பிப் 22, 2024 11:41 PM
புதுச்சேரி: இரங்கல் தீர்மானத்தில் பேசிய முதல்வர், எம்.எல்.ஏ.,க்களுக்கு மறைந்த சபாநாயகர் கண்ணனின் மகன் விக்னேஷ் கண்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி சட்டசபையில் முன்னாள் சபாநாயகரும், எம்.பி.,யுமான கண்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இரங்கல் தீர்மானத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எதிர்கட்சி தலைவர் சிவா, எம்.எல்.ஏ.,க்கள், நாஜிம், நேரு, சட்டசபை காங்., கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஆகியோருக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.
மறைந்த தலைவர் கண்ணன் சட்டசபையில் ஆற்றிய அளப்பரிய பணிகள், கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்கள் கட்சி பாகுபாடு இன்றி பாராட்டப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.