/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஸ்சில் தவறவிட்ட நகை ஒப்படைப்பு; கண்டக்டர், டிரைவருக்கு பாராட்டு
/
பஸ்சில் தவறவிட்ட நகை ஒப்படைப்பு; கண்டக்டர், டிரைவருக்கு பாராட்டு
பஸ்சில் தவறவிட்ட நகை ஒப்படைப்பு; கண்டக்டர், டிரைவருக்கு பாராட்டு
பஸ்சில் தவறவிட்ட நகை ஒப்படைப்பு; கண்டக்டர், டிரைவருக்கு பாராட்டு
ADDED : அக் 11, 2025 07:07 AM

புதுச்சேரி : பி.ஆர்.டி.சி., பஸ்சில் தவறவிட்ட பெண்ணின் செயினை மீட்டு கொடுத்த கண்டக்டர், டிரைவரை, அப்பெண் பாராட்டி, இனிப்பு வழங்கினார்.
திண்டிவனம் பகுதியை சேர்ந்த லலி தா, 58. இவர் கடந்த 29ம் தேதி புதுச்சேரியில் இருந்து திண்டிவனத்திற்கு பி.ஆர்.டி.சி., பஸ்சில் சென்றார். அப்போது, திண்டிவனம் பஸ் நிலையத்தில், லலிதா இறங்கிய போது, கழுத்தில் இருந்த 2 சவரன் தங்க செயின் கீழே விழுந்துள்ளது. அதனை மற்ற பயணி எடுக்க முயன்றபோது, கண்டக்டர் கண்ணன் அந்த செயினை எடுத்து, தவறவிட்ட பெண்ணிடம் கா ண்பித்து உறுதிப்படுத்திய பின் கொடுத்தார்.
இதற்காக, அந்த பெண் பி.ஆர்.டி.சி., பணிமனைக்கு நேரில் வந்து கண்டக்டர் கண்ணன், டிரைவர் நந்தகுமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, இனிப்பு வழங்கினார்.