ADDED : அக் 05, 2024 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி, காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் சிறைக்காவலர்கள் அடிக்கடி கைதிகளின் அறைகளில் சோதனை செய்து வருகின்றனர்.
அதன்படி, நேற்று சிறைக்காவலர்கள் கைதிகளின் அறைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தண்டனை கைதி மோகன் (எ) குமரேசன் அடைக்கப்பட்டிருந்த அறையில், அவரது ஷூ வடிவிலான காலணியில் தடை செய்யப்பட்ட குட்கா (ஹான்ஸ்) 4 பாக்கெட்கள் இருந்தது.
இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார், கோர்ட் அனுமதியுடன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.