ADDED : நவ 12, 2024 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஏனாம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சப் இன்ஸ் பெக்டர் முருகானந்தம் மற் றும் போலீசார் ஏனாம் சாவித் திரி நகரில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர்.
அப்போது, புன்னம் ஸ்ரீனு, 36; என்பவரது கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.1075 மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட் களை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.