காரைக்கால் தீர்த்தவாரியில் சப்பரம் சாய்ந்ததால் பரபரப்பு
காரைக்கால் தீர்த்தவாரியில் சப்பரம் சாய்ந்ததால் பரபரப்பு
ADDED : மார் 04, 2026 04:34 AM
காரைக்கால்: காரைக்கால் அருகே மாசிமக தீர்த்தவாரியில் பங்கேற்ற சவுரிராஜப் பெருமாளின் சப்பரம் சாய்ந்ததால் திடீர் பரபரப்பு நிலவியது.
காரைக்கால், திருப்பட்டினம், பட்டினச்சேரி கடற்கரையில் நேற்று மாசிமக தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
இதில் கோவில் பத்து கோதண்டராமர், திருமருகல் வரதராஜ பெருமாள், நிரவி கரியமாணிக்க பெருமாள், திருப்பட்டினம் பிரசன்னா வெங்க டேச பெருமாள் உட்பட பல்வேறு சுவாமிகள் எழுந்தருளினர்.
அதில், திருகண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கருடவாகனத்தில் சப்பரத்தில் உள்பகுதியில் அமர்ந்த நிலையில் மீனவர்கள், பட்டினச்சேரி கடற்கரைக்கு நடைப்பயணமாக கொண்டு வந்தனர்.
பெருமாள் வரும்போது சப்பரத்தில் அதிக சுமை இருந்ததால், பெருமாள் ஒரு பகுதியாக சாய்ந்த நிலையில் பட்டினச்சேரி கடல்கரைக்கு வருகைப்புரிந்தார்.
அவரை தீர்த்தவாரிக்கு கொண்டு சென்றபோது சம்பரம் திடீரென ஒருப்பக்கமாக சாய்ந்தது. அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என, கோஷம் எழுப்பினர்.
உடனே சுதாரித்த சப்பரம் துாக்கும் மீனவர்கள் பெருமாளை பாதுகாப்புடன் கொண்டு சென்று கடற்கரையில் பக்தர்களுக்கு காட்சிதரும் பகுதியில் இறக்கி வைத்து, நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. நாகதியாகராஜன் எம்.எல்.ஏ., உட்பட ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
