இண்டி கூட்டணியில் குழப்பம் ராகுல், ஸ்டாலின் பிரசாரம் உண்டா?
இண்டி கூட்டணியில் குழப்பம் ராகுல், ஸ்டாலின் பிரசாரம் உண்டா?
ADDED : மார் 28, 2026 05:13 AM
புதுச்சேரி: புதுச்சேரி இண்டி கூட்டணியில் வேட்பா ளர்களின் நேரடி போட்டியால் காங்., ராகுல், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆகியோர் பிரசாரம் உண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுச்சேரி இண்டி கூட்டணியில், காங்.,16, தி.மு.க.,13, வி.சி.க., 1 என தொகுதிகளை பிரித்துக் கொண்டனர்.
இந்நிலையில், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் உழவர்கரை, காலாப்பட்டு, ராஜ்பவன், திருபுவனை, காரைக்கால் தெற்கு ஆகிய 5 தொகுதி களில் காங்., கட்சி வடமாநில ஸ்டைலில் 'ப்ரெண்ட்லி கண்டஸ்ட்டிங்' என்று கூறி கூட்டணி கட்சி வேட்பாளர்களை கதற வைக்கும் வகையில் போட்டியிடுகிறது.
இது மட்டுமின்றி தீவிர மாக ஓட்டும் கேட்டு வருகிறது. இதனால், புதுச்சேரியில் 22 தொகுதிகளில் காங்., வேட்பாளர்கள் போட்டியில் இருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து, இவ்வளவு பிரச்னைகளுடன் உள்ள புதுச்சேரியில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆகியோர் வந்து பிரசாரம் செய்வார்களா அல்லது இண்டி கூட்டணியின் முக்கிய தலைவர்கள் வருகை இன்றி தேர்தல் ஓட்டுப் பதிவு முடிந்து விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
