/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., நிர்வாகி பிறந்த நாள் விழா
/
காங்., நிர்வாகி பிறந்த நாள் விழா
ADDED : பிப் 11, 2025 05:57 AM

புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதி காங்., மூத்த தலைவர் மணி 70வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி பொருப்பாளர் தேவதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., முன்னாள் தலைவர் சுப்ரமணியன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., வாழ்த்துரை வழங்கினர். மாநில இலக்கிய அணி தலைவர் வழக்கறிஞர் கோவிந்தராசு தொகுத்து வழங்கினார். காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., டில்லியில் இருந்து வாழ்த்து தெரிவித்தார்.
விழாவில் முன்னாள் கவுன்சிலர்கள் தமிழரசி, சேகர், வட்டார தலைவர் செல்வம், பார்த்திபன், தொகுதி அனைத்து பிரிவு நிர்வாகிகள் பங்கேற்று வாழ்த்தினர்.
இளைஞர் காங்., மாநில தலைவர் ஆனந்தபாபு, ராஜபவன் தொகுதி பிரதீஷ், காங்., பொதுச் செயலாளர் திருமுருகன், தனுசு, சந்திரிகா, வழக்கறிஞர் பிரிவு தலைவர் மருதுபாண்டியன், இந்திரா நகர் தொகுதி பொதுச் செயலாளர் ராதாகுமார், செயலாளர் ராஜேந்திரன், உருளையான்பேட்டை தொகுதி வட்டார தலைவர் ஆறுமுகம், முத்தியால்பேட்டை தொகுதி வட்டார தலைவர் கிருஷ்ணராஜ் வாழ்த்து தெரிவித்தனர்.
காங்., மூத்த தலைவர் மணி நன்றி கூறினார்.