ADDED : பிப் 05, 2024 03:42 AM
காரைக்கால : காரைக்கால் மாவட்டத்தில் காங்., சார்பில் வட்டார தலைவர்கள் ஆலோசனை மற்றும் கலந்தாய்வு கூட்டம் முன்னாள் காங்., தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் சந்திரமோகன். வட்டாரத் தலைவர் மாறன் முன்னிலை வகித்தனர். இக் கூட்டத்தில் காரைக்கால் மாவட்டத்தில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பூத் கமிட்டி அமைப்பது மற்றும் தொகுதி வாக்காளர் பட்டியலும் அந்தந்த வட்டார காங்., தலைவர்களுக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட விவசாய கடன் தள்ளுபடியை ரத்து செய்யாமல் விவசாயிகளை வஞ்சிக்கும் கூட்டுறவு வங்கிகளை கண்டித்து வரும் ஏழாம் தேதி மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் வட்டார தலைவர் சுப்பையன் ,காங்., பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

