/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுப்பணித்துறை பணிக்கு ஈகன் அகாடமியில் பயின்ற 22 பேர் தேர்வு முதல்வர் ரங்கசாமியிடம் வாழ்த்து

ADDED : நவ 07, 2024 02:47 AM

புதுச்சேரி: பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் தேர்வில் ஈகன் இன்ஜினியரிங் அகாடமியில் பயின்று தேர்வான 22 பேர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் 99 இளநிலை பொறியாளர்கள், 69 மேற்பார்வையாளர்கள் தேர்வு செய்ய கடந்த அக்., 27ம் தேதி போட்டி தேர்வு நடந்தது. இதில், அரியாங்குப்பம், மணவெளியில் இயங்கி வரும் ஈகன் பொறியியல் கல்விக்கூடம் (ஈகன் இன்ஜினியரிங் அகாடமி) பயிற்சி பெற்ற 13 பேர் இளநிலை பொறியாளராகவும், 9 பேர் மேற்பார்வையாளர்களாக தேர்வாகினர். 16 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
ஈகன் இன்ஜினியரிங் அகடாமி நிறுவனர் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சீனு திருஞானம் தலைமையில், அந்நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 22 பேர், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
ஈகன் அகாடமியில், உள்ளாட்சித்துறை இளநிலை பொறியாளர், மெக்கானிக்கல் பிரிவு இளநிலை பொறியாளர், போக்குவரத்து துறை ஜே.இ., மோட்டார் வாகன ஆய்வாளர், வேளாண் துறை ஏ.ஒ., தமிழக அரசின் சிவில் உதவி பொறியாளர், உதவியாளர் மற்றும் சப்இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான போட்டி தேர்வுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.