/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் ரங்கசாமி போகி வாழ்த்து
/
முதல்வர் ரங்கசாமி போகி வாழ்த்து
ADDED : ஜன 14, 2024 04:22 AM
புதுச்சேரி, : சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்காத வகையில், போகியை கொண்டாடுவோம் என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள், போகி திருநாள் கொண்டாப்படுகிறது. 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' எனும் அடிப்படையில் கொண்டாடப்படும், இந்த பண்டிகையன்று, பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை எரிப்பதால், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது.
இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், போகி பண்டிகையை கொண்டாட முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தி உள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள போகி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;
பழையன கழிந்து, புதியன சேர்ந்து உங்கள் வாழ்வில் ஒவ்வொரு நல்ல சந்தர்ப்பத்தையும் வழங்குவதற்கான புதிய தொடக்கமாக இந்த போகி அமையட்டும்.
தீமைகள் விலகி நன்மைகள் பெருகட்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்காத வகையில், போகியை கொண்டாடுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

