/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப் போட்டி பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு
/
பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப் போட்டி பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு
பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப் போட்டி பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு
பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப் போட்டி பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜன 09, 2025 06:11 AM
பாகூர்: உலக அளவிலான பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி சார்பில் பங்கேற்று பதக்கம் வென்ற புதுச்சேரி வீரர்கள், கல்வி துறை இயக்குனரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
உலக அளவிலான 5வது ஜூனியர் பென்காக் சிலாட் போட்டி, கடந்த மாதம் அபுதாபி நாட்டில் நடைபெற்றது. இதில், ஜூனியர் பிரிவில் இந்திய அணி சார்பில் புதுச்சேரி வீரர்கள் பாலபிரசாத், சுர்ஜித், அறிவுமதி, அனுகிரகா, செஞ்சோலை, ஓவியா, செம்மதி, ஸ்ரீஹரிணி, சப் ஜூனியர் பிரிவில் செந்நிலா ஆகியோர் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். இவர்களுடன், இந்திய பென்காக் சிலாட் கூட்டமைப்பின் சார்பில், இந்திய அணியின் மேலாளராக புதுச்சேரியை சேர்ந்த அருள்ஜோதி பங்கேற்றிருந்தார்.
இதில், ஜூனியர் ரெகு பிரிவில் செஞ்சோலை, ஓவியா, செம்மதி ஆகியோர் வெள்ளி பதக்கமும், சோலோ பிரிவில் ஸ்ரீஹரிணி வெள்ளியும், அனுகிரகா வெண்கல பதக்கமும், சப் ஜூனியர் பிரிவில் செந்நிலா வெண்கல பதக்கமும் வென்று இந்தியாவிற்கும், புதுச்சேரி மாநிலத்திற்கும் பெருமையை தேடி தந்துள்ளனர்.
பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள், புதுச்சேரி கல்வி துறை இயக்குனர் பிரியதர்ஷினி, விளையாட்டு பிரிவு துணை இயக்குனர் வைத்தியநாதன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.