/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு தேர்வில் வெற்றி பெற மாணவர்களுக்கு வாழ்த்து
/
அரசு தேர்வில் வெற்றி பெற மாணவர்களுக்கு வாழ்த்து
ADDED : டிச 18, 2025 05:31 AM

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த மாணவர்கள் எல்.டி.சி., யு.டி.சி., தேர்வில் வெற்றி பெற மோடி மக்கள் சேவை மைய நிறுவனர் பிரபு தாஸ் அறிவு சார்ந்த புத்தகங்களை வழங்கினார்.
உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு எல்.டி.சி., யு.டி.சி., தேர்வில் வெற்றி பெருவதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் பஸ் நிலையம் பின்புறம் உள்ள சக்தி கோச்சிங் சென்டரில் நடந்தது.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மோடி மக்கள் சேவை மைய நிறுவனர் பிரபுதாஸ் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், அவர்கள் அரசு தேர்வில் வெற்றி பெற அறிவு சார்ந்த புத்தகங்களை பரிசாக வழங்கினார். அப்போது பன்னீர்செல்வம், முரளி ஆகியோர் உடனிருந்தனர்.

