தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பண்பாட்டு ஒருங்கிணைப்பு நாள் போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

 பண்பாட்டு ஒருங்கிணைப்பு நாள் போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

 பண்பாட்டு ஒருங்கிணைப்பு நாள் போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : நவ 30, 2025 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 05:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான பண்பாட்டு ஒருங்கிணைப்பு நாள் விழாவையொட்டி, பல்வேறு போட்டிகள் நடந்தன.

அதில், இந்திராகாந்தி அரசு பள்ளி மாணவிகள் அபிநயா, பூஜா, சுனிதா, அனுஷ்கா, பூஜா, பாக்கிய லட்சுமி ஆகியோர் குழு நடனத்திலும், மாணவி தீபிகா தனி நடனத்திலும், மாணவி சுருதிலட்சுமி தனி பாடலிலும் முதலிடம் பிடித்தனர்.

இதேபோல், குழு பாடலில் பிளஸ் 1 மாணவிகள் வைஷ்ணவி, சாதனா, சீமா, மோகனா, காயத்ரி ஆகியோர் இரண்டாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நடந்தது. பள்ளி துணை முதல்வர் சந்திரன் தலைமை தாங்கி பாராட்டினார். பொறுப்பாசிரியர் மணிமொழி, தலைமை ஆசிரியர் விஜேஷ் முன்னிலை வகித்தனர்.

இதில், ஆசிரியர்கள் ஜூடித் ஜெனட் ஜோஸ்லின், கமலி எலிசபெத், உமா மகேஸ்வரி, அனிதா மேரி கிரேஸ், கலைச்செல்வி, நந்தினி, ஜெசி, அமலா ராணி செல்வம், சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us