தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மண்டல அளவிலான போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

மண்டல அளவிலான போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

மண்டல அளவிலான போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : நவ 07, 2024 02:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2024 02:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு, மண்டல அளவிலான வினாடி - வினா, பேச்சு, பாட்டு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன.

இந்திரா நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டிகளில், அப்பள்ளியின் மாணவ, மாணவிகள் வென்று பரிசுகளை பெற்றனர். அதன்படி, நடுநிலைப் பிரிவு வினாடி - வினா போட்டியில் மாணவர் ரதீஷ், மாணவி முஷ்மூதா பாத்திமா ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.

உயர்நிலைப் பிரிவு பாட்டு போட்டியில் மாணவிகள் வைஷ்ணவி, சாதனா, சவிதா, பூஜா, சுனிதா ஆகியோர் 2ம் பரிசும், மேல்நிலைப் பிரிவு பேச்சு போட்டியில் மாணவி திரிஷா மிஸ்ரா, கட்டுரை போட்டியில் மாணவி ராஜராஜேஸ்வரி ஆகியோர் 3ம் பரிசும் பெற்றனர். அவர்களை பள்ளியின் துணை முதல்வர் சந்திரன் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். இதில், பொறுப்பாசிரியர் மணிமொழி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us